குலசேகரம் அருகே ஏணியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு

குலசேகரம் அருகே ஏணியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-08-31 15:53 GMT

குலசேகரம்:

புதுக்கடை மரவிளையைச் சேர்ந்தவர் ஏசுதாஸ் (வயது 37). இவர் குலசேகரம் அருகே திருந்திக்கரை பகுதியில் உள்ள ஒரு தனியார் கேபிள் டி.வி. இணைப்பு வழங்கும் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். திருமணமாகவில்லை.

நேற்று மதியம் இவர் திருநந்திக்கரை அருகே வெட்டிமுறிச்சான் என்ற பகுதியில் ஒரு ஏணியின் மேல் ஏறி நின்றவாறு கேபிள் வயரை சீரமைக்கும் பணியை மேற்கொண்டார். மேலும் ஏணியை பிடித்தபடி இருவர் நின்றிருந்தார்.

அந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக ஏசுதாஸ் ஏணியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என கூறினர். மேலும் இதுகுறித்து குலசேகரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

---

Tags:    

மேலும் செய்திகள்