பாலத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு

தியாகதுருகம் அருகே பாலத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு

Update: 2023-01-17 18:45 GMT

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம் அருகே வேங்கைவாடி கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சி (வயது58). தொழிலாளியான இவர் சம்பவத்தன்று அவரது வீட்டின் முன்பு கட்டப்பட்டிருந்த சிறிய பாலத்தின் கட்டையில் அமர்ந்திருந்தபோது எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்