குளத்தில் மூழ்கி தொழிலாளி சாவு
மீன்பிடித்தபோது குளத்தில் மூழ்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள கல்லாபுரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 40). கூலித்தொழிலாளி. இவர், பழனி குதிரையாறு அருகே புதுக்குளத்தில் வலை போட்டு மீன் பிடித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக குளத்தில் விழுந்து மாரிமுத்து தண்ணீரில் மூழ்கி பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த பழனி தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் மாரிமுத்துவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.