விஷம் குடித்து தொழிலாளி சாவு

திருமருகல் அருகே விஷம் குடித்து தொழிலாளி சாவு

Update: 2023-08-14 18:45 GMT

திட்டச்சேரி:

திருமருகல் ஒன்றியம் சியாத்தமங்கை நடுத்தெருவை சேர்ந்தவர் குமரகுரு (வயது 48). கூலித்தொழிலாளி. இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படுவதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று குமரகுருவுக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டது. அதையடுத்து வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி (விஷம்) மருந்தை குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் குமரகுரு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த திட்டச்சேரி போலீசார் குமரகுரு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்