கான்கிரீட் சுவர் விழுந்து தொழிலாளி பலி

கான்கிரீட் சுவர் விழுந்து தொழிலாளி பலி

Update: 2022-10-08 18:45 GMT

தஞ்சை மாவட்டம் மதுக்கூர் ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் முத்துவேல் (வயது 22). இவர் நாகை நம்பியார் நகர் துறைமுக கட்டுமான பணியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்றுமுன்தினம் மண் அரிப்பை தடுப்பதற்கான பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக கான்கிரீட் சுவர் இடிந்து முத்துவேல் மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்