மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தொழிலாளி சாவு

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-08-21 18:31 GMT

தளவாபாளையம் பஜனைமடத்தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 51). இவர் இருசக்கர வாகனங்களுக்கு பஞ்சர் பார்க்கும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் தனது மோட்டார் சைக்கிளில் ஆத்தூர் பிரிவு அருகே வந்து கொண்டிருந்தபோது அந்த வழியாக ஒரு கார் ராஜேந்திரன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ராஜேந்திரனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து ராஜேந்திரன் மகன் அன்பொலி (22) ெகாடுத்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீசார் கார் டிரைவர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்