மங்களமேடு:
வாகனம் மோதியது
நாமக்கல் மாவட்டம், போடிநாயக்கன்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் பொன்னுசாமி(வயது 65). கூலித்தொழிலாளியான இவர் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில், கிணற்றில் தூர்வாரும் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் இரவு வாலிகண்டபுரத்தில் பொருட்கள் வாங்க சென்றுள்ளார். தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த வாகனம், அவர் மீது மோதியது.
சாவு
இதில் படுகாயமடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு அவர் உயிரிழந்தார். இது குறித்து மங்களமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.