பஸ் மோதி தொழிலாளி சாவு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பஸ் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்.
ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள மல்லி போலீஸ் சரகத்தைச் சேர்ந்தது ராமகிருஷ்ணாபுரம்.இந்த ஊரைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 61).கூலிதொழிலாளி. இவர் ஸ்ரீவில்லிபுத்தூர்- சிவகாசி ரோட்டில் தனது மொபட்டில் வந்த போது ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி வந்த பஸ் மோதியதில் அதே இடத்தில் தலை நசுங்கி இறந்தார்., இது குறித்து மல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து ஆமதுரை சேர்ந்த பஸ் டிரைவர் ரகுபதி (48) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.