விஷ வண்டு கடித்து தொழிலாளி பலி

விஷ வண்டு கடித்து தொழிலாளி பலியானார்.

Update: 2023-06-02 19:05 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர், 

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அச்சம்தவிர்த்தான் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பையா (வயது 29). இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார். இந்தநிலையில் ஆடு மேய்க்கும் போது விஷ வண்டு கடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் ேசர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியிலும், இதையடுத்து மதுரை அரசு ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி சுப்பையா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்