ராமநாதபுரம் அருகே தினைக்குளம் வேதக்காரன்வலசையை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 47). இவர் தாதனேந்தலில் முனியசாமி என்பவருக்கு சொந்தமான இறால் பண்ணையில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இறால்களுக்கு இரை போட தண்ணீருக்குள் சென்ற கனகராஜ் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து திருப்புல்லாணி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.