தீக்குளித்து தொழிலாளி தற்கொலை

சிவகாசி அருகே மகள் திருமண செலவுக்கு பணம் கிடைக்காததால் தொழிலாளி தீக்குளித்து தற்ெகாலை செய்து கொண்டார்.;

Update: 2023-05-06 19:00 GMT

சிவகாசி, 

சிவகாசி அருகே மகள் திருமண செலவுக்கு பணம் கிடைக்காததால் தொழிலாளி தீக்குளித்து தற்ெகாலை செய்து கொண்டார்.

திருமணச்செலவு

சிவகாசி அருகே உள்ள ஜமீன்சல்வார்பட்டியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 50). கூலி தொழிலாளியான இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவியும், 2 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் ஒரு மகளுக்கு மட்டும் திருமணம் செய்யப்பட்ட நிலையில் 2-வது மகள் முருகேஸ்வரிக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது.

இந்தநிலையில் திருமண செலவுக்கு தேவையான பணத்தை உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. முத்துப்பாண்டி எதிர் பார்த்த பணம் அவருக்கு கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் மனவேதனையுடன் இருந்ததாக தெரிகிறது.

தீக்குளித்து தற்கொலை

சம்பவத்தன்று முத்துப்பாண்டி வீட்டில் இருந்த மண்எண்ணைய்யை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் உடல் முழுவதும் அவருக்கு தீக்காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் தீக்காய சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.

அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மாரியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் ஜமீன்சல்வார்பட்டி கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்