தீக்குளித்து தொழிலாளி தற்கொலை

அருப்புக்கோட்டை அருகே தீக்குளித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-11-14 18:49 GMT

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டை அருகே பாலவனத்தம் வடக்குபட்டியை சேர்ந்தவர் பாண்டியராஜ் (வயது 32). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ஈஸ்வரி. இவர் கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது., இந்நிலையில் பாண்டியராஜ் தனது உடலில் மண் எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் படுகாயம் அடைந்த பாண்டியராஜை அவரது குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி ஈஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்