ஆனைமலை
ஆனைமலையை அடுத்த வேட்டைக்காரன் புதூர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல்(வயது 50). கூலித்தொழிலாளி. இவர் மது குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில் சக்திவேல் மது குடிக்கும் பழக்கத்தை கைவிட முடியாமல் சிரமப்பட்டு வந்தார். மேலும் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர், நேற்று ஆனைமலை பகுதியில் ஓடும் ஆழியாற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.