தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை
ஓட்டப்பிடாரம் அருகேதொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் பகுதியை சேர்ந்த அந்தோணிராஜ் மகன் முருகன் (வயது 45). இவர் கூலி தொழிலாளி. இவரது மனைவி கனகவல்லி. முருகன் அடிக்கடி மதுபோதையில் வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் மனைவி குழந்தைகளுடன் திருப்பூருக்கு சென்றுள்ளார். முருகன் மட்டும் தனது பெற்றவுடன் வசித்து வந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த முருகன் நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.