விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.
ஈரோடு கள்ளுக்கடைமேடு ஜீவானந்தம் வீதியை சேர்ந்தவர் மரியதாஸ் (வயது 53). தொழிலாளி. இவர் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் குணமாகவில்லை. இந்த நிலையில் மரியதாஸ் வாழ்க்கையில் வெறுப்புற்று காணப்பட்டு் வந்தார். இதனால் சம்பவத்தன்று வீட்டில் இருந்த சல்பாஸ் மாத்திரையை (விஷம்) அளவுக்கு அதிகமாக தின்று மயங்கிய நிலையில் கிடந்தார்.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மரியதாஸ் இறந்தார். இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.