விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

திருவள்ளூர் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2022-08-10 12:39 GMT

திருவள்ளூரை அடுத்த சிறுவனூர் கன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 59). கூலித் தொழிலாளி. இவர் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் பல ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் அவருக்கு வயிற்றுவலி ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராமகிருஷ்ணன் உயிரிழந்தார். இதுகுறித்து புல்லரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்