விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
சிவகாசியில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
சிவகாசி,
சிவகாசி புதுதெருவை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 75). இவர் பட்டாசு ஆலையில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவரது மூத்த மகன் மனோகரன் மாற்றுத்திறனாளி என்பதால் திருமணம் செய்து கொள்ளாமல் தம்பி முருகேசனுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் தங்கவேலுக்கு கடந்த சில வருடங்களாக தீராத தலைவலி இருந்து வந்துள்ளது. இதற்காக பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் நோய் குண மாகவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் மனமுடைந்த முதியவர் தங்கவேல், மாற்றுத்திறனாளி மகன் மனோகரன் ஆகிய 2 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷம் குடித்து விட்டனர். உடனே அருகில் இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை காரணமாக மனோகரன் குணமாகி வீடு திரும்பினார். ஆனால் தங்கவேல் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் நள்ளிரவு பரிதாபமாக இறந்தார். இது குறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.