திருமணமாகாத ஏக்கத்தில் தொழிலாளி தற்கொலை

மார்த்தாண்டம் அருகே திருமணமாகாத ஏக்கத்தில் தொழிலாளி தற்கொலை

Update: 2023-07-16 18:45 GMT

குழித்துறை

மார்த்தாண்டம் அருகே உள்ள குளக்கச்சி பகுதியை சேர்ந்தவர் செல்லசாமி. இவருடைய மகன் ஜெகதீஷ் (வயது 38)தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இதனால் அவர் மது பழக்கத்திற்கு அடிமையானார். மேலும் கடந்த சில நாட்களாக மிகுந்த மன வருத்தத்தில் இருந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று ஜெகதீஸ் தான் வசித்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து ஜெகதீசின் சகோதரர் குமார் கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்