நண்பர் இறந்த துக்கத்தில் தொழிலாளி தற்கொலை

தேனியில் நண்பர் இறந்த துக்கத்தில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்

Update: 2022-07-05 16:02 GMT

தேனி சிவராம் நகரை சேர்ந்தவர் சங்கிலிராஜா (வயது 36). இவர் தேனியில் உள்ள ஒரு மரம் அறுக்கும் மில்லில் வேலை பார்த்து வந்தார். அதே மில்லில் அவருடைய நண்பர் காமுத்துரை என்பவரும் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் காமுத்துரை கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இதனால் நண்பர் இறந்த துக்கத்தில் இருந்த சங்கிலிராஜா தானும் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று அவர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதை அறிந்த அவருடைய மனைவி சித்ராலட்சுமி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று சங்கிலிராஜாவை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து சித்ராலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர் இறந்த துக்கத்தில் தொழிலாளி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்