குடும்ப தகராறில் தொழிலாளி தற்கொலை

சேந்தமங்கலம் அருகே குடும்ப தகராறில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2023-08-23 18:45 GMT

சேந்தமங்கலம்

குடும்ப தகராறு

சேந்தமங்கலம் அருகே உள்ள துத்திக்குளம் இந்திரா காலனியை சேர்ந்தவர் ஆனஸ்ட்ராஜ் (வயது 26). இசை குழுவில் உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி வினிதா. இவர்களுக்கு 9 மாத ஆண் குழந்தை உள்ளது.

இந்தநிலையில் ஆனஸ்ட்ராஜ்க்கும், அவரது மனைவி வினிதாவிற்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது. இதனால் அவர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஆனஸ்ட்ராஜ் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சாவு

இதை கண்ட வினிதா அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஆனஸ்ட்ராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதை கேட்ட அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். அந்த சம்பவம் குறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த ஆனஸ்ட்ராஜ்க்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்