மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை

அரக்கோணம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்

Update: 2023-06-25 17:16 GMT

அரக்கோணம்

அரக்கோணம் அடுத்த வேடல் கிராமத்தை சேர்ந்தவர் குப்பன் (வயது 37). கூலி தொழிலாளி. இவருக்கு உடல் நிலை பாதிப்பின் காரணத்தால் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சம்பவத்தன்று குப்பன் மதுவில் அளவுக்கு அதிகமாக விஷம் கலந்து குடித்து மயங்கி விழுந்தார்.

இதனை கண்ட அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்