மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை

அரக்கோணத்தில் மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-03-26 17:01 GMT

அரக்கோணம் ஏ.என்.கண்டிகை பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 35). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் இவரது மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் இரவு மதுவில் பூச்சி மருந்து (விஷம்) கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அரக்கோணம் டவுன் போலீசார் விரைந்து வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்