மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை

கலவை அருகே கடன்பிரச்சினையால் மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-12-09 17:30 GMT

கலவையை அடுத்த பள்ளமுள்ளவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன், தொழிலாளி. இவர் சில நாட்களுக்கு முன்புதான் புதிய வீடு கட்டி உள்ளார். பலரிடம் கடன் வாங்கி வீடு கட்டியதாக கூறப்படுகிறது. கடன் கொடுத்தவர்கள் முருகனிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்கள். அதனால் வேதனை அடைந்து முருகன் நேற்று முன்தினம் மதுவுடன் விஷம் கலந்து குடித்துள்ளார். அவரை அவரது மனைவி, தாய் மற்றும் அருகில் இருந்தவர்கள் மீட்டு கலவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டார்.

இதுகுறித்து கலவை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்