வீடியோ காலில் மனைவிக்கு தகவல் தொிவித்து விட்டு தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

திங்கள்சந்தை அருகே மகள் இறந்த துக்கத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-05-15 18:45 GMT

திங்கள்சந்தை:

திங்கள்சந்தை அருகே மகள் இறந்த துக்கத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தச்சு தொழிலாளி

திங்கள்சந்தை அருகே உள்ள பறையன்விளை விநாயகர் தெருவை சேர்ந்தவர் அந்தோணி அமல்ராஜ் (வயது 41), தச்சு தொழிலாளி. இவருடைய மனைவி சத்தியகலா (36). இவர்களுடைய 2-வது மகள் ஸ்ரீலெட்சுமி (15). இவர் அருகில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மாதம் 14-ந் தேதி ஸ்ரீலெட்சுமிக்கும் அவரது சகோதரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனவருத்தமடைந்த ஸ்ரீலெட்சுமி படுக்கை அறையில் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதன்பின்பு அந்தோணி அமல்ராஜ் மகள் இறந்த மன வேதனையில் இருந்து வந்துள்ளார். மேலும் அவருக்கும் மனைவி சத்தியகலாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்ததாக தெரிகிறது. இதனால் மனைவி சத்திய கலா கோபித்து கொண்டு தனது தாயார் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.

தற்கொலை

இந்தநிலையில் நேற்று முன்தினம் சத்திய கலாவிடம் அந்தோணி அமல்ராஜ் செல்போனில் வீடியோ கால் மூலம் பேசினார். அப்போது, 'மகள் சென்ற இடத்திற்கே நானும் செல்கிறேன்' என கூறியுள்ளார். அதன்பின்பு செல்போனை சுவிட்ச் ஆப் செய்து வைத்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த மனைவி சத்தியகலா உறவினர்களுக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார். அப்போது அந்தோணி அமல்ராஜ் வீட்டுக்கு வந்த உறவினர்கள் கதவை தட்டிப்பார்த்தபோது கதவு திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் இரணியல் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உறவினர்கள் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.அப்போது அந்தோணி அமல்ராஜ் மின்விசிறியில் போர்வையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பாிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகள் இறந்த ஒரு மாதத்தில் தந்தையும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்