தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
மனைவி பிரிந்து சென்றதால் விரக்தியில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே உள்ள ராசிசெட்டிபாளையத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 45). கைத்தறி தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த சுமதி என்பவரை திருமணம் செய்து உள்ளார். இதற்கிடையில் கடந்த 2 மாதங்களுக்கு ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக அவரது மனைவி பிரிந்து சென்றதாக தெரிகிறது.
அதன்பிறகு வீட்டில் கைத்தறி போட்டு வேலை செய்து வந்தார். இதற்கிடையில் மனைவி பிரிந்து சென்றதால் விரக்தியில் குடிபழக்கத்திற்கு ஆளானதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டிற்கு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.