புதுக்கடை அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
புதுக்கடை அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
புதுக்கடை:
புதுக்கடை அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுக்கடை அருகே உள்ள பைங்குளம் பகுதியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 50), கூலித்தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. இதனால் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றார். பின்னர் மறுநாள் காலையில் வெகுநேரம் ஆகியும் அவரது அறை கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் அறைக்கு சென்று பார்த்தபோது முத்துகிருஷ்ணன் நைலான் கயிற்றால் தூக்குப்போட்டு இறந்த நிலையில் தொங்கி கொண்டிருந்தார். இதுகுறித்து அவரது மனைவி ஷைலி பாய் புதுக்கடை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் முத்துகிருஷ்ணனின் உடலை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.