தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

நிதி நிறுவன ஊழியர் திட்டியதால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2023-05-27 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் விராட்டிக்குப்பம் சாலை பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ரவி(வயது 41). இவர் ஓட்டல் தொழில் நடத்துவதற்காக கடந்த 2016-ம் ஆண்டு விழுப்புரத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் ரூ.7 லட்சம் கடன் வாங்கியிருந்தார். அதில் ரூ.4 லட்சத்தை செலுத்தி விட்டார். மீதமுள்ள ரூ.3 லட்சத்தை கட்டவில்லை என கூறப்படுகிறது. அதற்கு அந்த நிறுவனத்தின் ஊழியரான சுரேஷ்குமார் என்பவர், ரவியிடம் சென்று ரூ.3 லட்சத்தை கட்ட மாட்டாயா? நீ ஏன் உயிரோடு இருக்கிறாய் எனக்கேட்டுள்ளார். இதனால் மனமுடைந்த ரவி, தனது வீட்டு மாடியில் உள்ள அறையில் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து ரவியின் தந்தை ராஜேந்திரன், விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சுரேஷ்குமார் மீது தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்