தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

கிணத்துக்கடவில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-05-17 18:45 GMT

கிணத்துக்கடவு

கோவையை அடுத்த மதுக்கரை கே.ஜி.சாவடியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 58). இவர் கிணத்துக்கடவில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இரவு 2-வது மாடியில் படிக்கட்டின் இரும்பு கைப்பிடியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்