நாகர்கோவிலில்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

நாகர்கோவிலில்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-03-09 20:46 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவில் கோட்டார் டி.வி.டி. காலனி 4-வது தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது 53). கட்டிட தொழிலாளி. இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் நேற்று காலையில் வீட்டின் அறையில் உள்ள மின்விசிறி பொருத்துவதற்கான கொக்கியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த கோட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமர், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ராமசாமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ராமசாமியின் மகன் சுபாஷ் (22) கொடுத்த புகாரின்பேரில் கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

----------

Tags:    

மேலும் செய்திகள்