நுள்ளிவிளை அருகேதொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

நுள்ளிவிளை அருகேதொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலைசெய்து கொண்டார்.

Update: 2022-12-30 18:45 GMT

திங்கள்சந்தை:

நுள்ளிவிளை அருகே உள்ள மூலச்சன்விளையை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது36), கூலி தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தூங்கச் சென்றவர் நேற்று காலையில் வெகுநேரமாகியும் அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ராஜேஷ்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.

இதுகுறித்து அவரது தாயார் பாக்கியலட்சுமி (65) இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்