தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
நச்சலூர் அருகே மது குடிக்க மனைவி பணம் தராததால் ெதாழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கரூர் மாவட்டம், நச்சலூர் அருகே உள்ள பொய்யாமணி புலவர்புரம் தெருவை சேர்ந்தவர் வீரமலை (வயது 51), தொழிலாளி. இவருக்கு திருமணமாகி சந்திரா என்ற மனைவியும், ஒரு மகன், 3 மகள்கள் உள்ளனர். இந்தநிலையில் கடந்த 27-ந்தேதி இரவு மது போதையில் இருந்த வீரமலை தனது மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அதற்கு அவர் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது.
பின்னர் வீரமலை வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். இதையடுத்து வெகுநேரம் கழித்து சந்திரா வீட்டிற்கு வெளியே உள்ள ஆட்டு கொட்டகைக்கு வந்துள்ளார். அப்போது வீரமலை தூக்குப்போட்டு தொங்கி கொண்டிருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சந்திரா சத்தம் போட்டார்.
சாவு
இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் வீரமலையை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு வீரமலை பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து வீரமலை மகன் வீரக்குமார் கொடுத்த புகாரின்பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.