தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

உவரி அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-09-24 20:39 GMT

திசையன்விளை:

உவரி அருகே உள்ள குண்டல் வடக்குத்தெருவை சேர்ந்தவர் பிரபு (வயது 41) தொழிலாளி. இவருடைய மனைவி கருத்துவேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த பிரபு வாழ்க்கையில் வெறுப்பு அடைந்து நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். சம்பவம் குறித்து அவரது தந்தை துரைப்பாண்டி உவரி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்