தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-09-23 19:05 GMT

வெள்ளியணை அருகே உள்ள மணவாடி பெரியார் நகரை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 44). வெல்டிங் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி வள்ளி (37) என்ற மனைவியும், ஹரிஹரன் (19), சஞ்சய்குமார் (15) ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர். தியாகராஜன் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால், குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனைவி வள்ளி கடந்த 19-ந்தேதி கோபித்துக்கொண்டு தனது தாய் வீடான ஊட்டிக்கு சென்றுவிட்டார். 2 மகன்களுடன் தியாகராஜன் மட்டும் வீட்டில் இருந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை வேலைக்கு சென்ற ஹரிஹரனும், பள்ளிக்கு சென்ற சஞ்சய்குமாரும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீடு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. இதனையடுத்து பின் பக்க ஜன்னல் வழியாக பார்த்தபோது அங்கு தியாகராஜன் ஆஸ்பெட்டாஸ் போட்ட வீட்டின் மேல் கம்பியில் சேலையால் தூக்குமாட்டி தொங்கி கொண்டிருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மகன்கள் இருவரும் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து தியாகராஜனை மீட்டு கார் மூலம் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்