தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-09-13 19:40 GMT

அம்பை:

கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள தெற்கு கல்லிடைக்குறிச்சி பொன்மாநகர் காலனியை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 39). கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணம் முடிந்து 2 குழந்தைகள் உள்ளனர். சந்திரசேகரன் சமீப காலமாக சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாகவும், இதனை அவரது மனைவி கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் இதுதொடர்பாக கடந்த சில நாட்களாக கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் சந்திரசேகரன் தூக்குப்போட்டு தற்கொாலை செய்து கொண்டார். இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்