தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
வாலாஜா அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வாலாஜாவை அடுத்த குடிமல்லூர் கிராமத்தில் வேளாளர் தெருவை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 52). தொழிலாளி. இவரது மனைவி 15 வருடங்களுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் குடிபழக்கத்திற்கு ஆளான அய்யப்பன் தொடர்ந்து குடித்து வந்துள்ளார். இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் ஏரிக்கரை பகுதியில் மாரியம்மன் கோவில் அருகில் உள்ள வேப்பமரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து, அய்யப்பனின் உடலை பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.