அருமனை அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

அருமனை அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-09-02 18:03 GMT

அருமனை:

அருமனை அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அருமனை அருகே உள்ள மாங்கோடு பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது37), கூலி தொழிலாளி. இவர் கேரள மாநிலம் பாலக்காட்டில் ஒரு பெண்ணை திருமணம் செய்து அங்கேயே வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். குமார் அவ்வப்போது ஊருக்கு வந்து செல்வது வழக்கம். இவரது மூத்த மகளுக்கு திருமணமாகி ஒரு மாதமாகிறது.

குமார் கடந்த ஒரு வாரமாக சொந்த ஊரான மாங்கோடு பகுதியில் தனியாக வசித்து வந்தார். இந்தநிலையில் அவர் வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த அருமனை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்