தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
திண்டுக்கல் அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
திண்டுக்கல் அருகே உள்ள கொட்டபட்டி பழைய தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 29). கூலித்தொழிலாளி. இவர் கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் அவருக்கு குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த விக்னேஷ், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.