தூக்குப்போட்டு நெசவுத்தொழிலாளி தற்கொலை
ஆரணி அருகே தூக்குப்போட்டு நெசவுத்தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
ஆரணி
ஆரணி அருகே எஸ்.வி. நகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 53), நெசவுத்தொழிலாளி. இவரது மனைவி ஜெயலட்சுமி, இவர்களுக்கு மகன் விக்னேஷ் என்ற மகன் உள்ளார்.
இந்த நிலையில் சுப்பிரமணியை பிரிந்து ஆரணியில் ஜெயலட்சுமியும், விக்னேசும் வாழ்ந்து வந்தனர்.
இதனால் விரக்தி அடைந்த சுப்பிரமணி எஸ்.வி.நகரத்தில் தர்கா அருகே உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆரணி தாலுகா போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.