தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
பேரம்பாக்கம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.;
திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகே உள்ள கொட்டையூர் பாடசாலை தெருவை சேர்ந்தவர் ராஜு (வயது 41). இவருக்கு உமா என்கின்ற மனைவியும், அரவிந்தன், ஆகாஷ் என்கின்ற 2 மகன்களும் உள்ளனர். ராஜி கொட்டையூரில் தனியாக தங்கி இருந்து கூலிவேலை செய்து வந்தார். அவரது மனைவி மற்றும் இரண்டு மகன்களும் சென்னை திருமுல்லைவாயலில் உள்ள மற்றொரு வீட்டில் வசித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் மது பழக்கம் கொண்ட ராஜி அதிக அளவில் மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று முன்தினம் ராஜு தீராத உடல் வலியால் அவதிப்பட்டார். இதனால் அவர் வலி தாங்க முடியாமல் பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்துவிட்டு சுயநினைவு இன்றி மயங்கி கீழே விழுந்து கிடந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவள்ளூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலன் இல்லாமல் ராஜி பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து அவரது மகன் அரவிந்தன் மப்பேடு போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.