தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
திசையன்விளை அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திசையன்விளை:
திசையன்விளை அருகே உள்ள மருதநாச்சிவிளையை சேர்நதவர் முருகேசன் (வயது 42), தொழிலாளி. கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, மனைவி திசையன்விளையில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். முருகேசன் அவரது மனைவியை தேடி அங்கு சென்றபோது அவர் அங்கு இல்லை என கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த முருகேசன் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மகன் வீரகாளிமுத்து திசையன்விளை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.