தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

திருத்தணியில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-07-12 10:58 GMT

திருத்தணி ஒன்றியத்திற்கு உட்பட்ட வி.கே.எண்.கண்டிகை அருந்ததி காலனியில் வசித்து வருபவர் செங்கல்வராயன். இவரது மகன் ஶ்ரீநாத் (வயது 32). தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் கடந்த ஒரு வருடமாக தீராத வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதன் காரணமாக கடந்த 7-ந் தேதி வீட்டில் இருந்த விஷத்தை குடித்துள்ளார். அருகில் இருந்தவர்கள் ஶ்ரீநாத்தை மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து விட்டார். இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்