தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
ஓட்டப்பிடாரம் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கோவிந்தன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் மகன் மணிராஜ் (வயது 47) இவர் கூலி தொழிலாளி. இவரது மனைவி பேச்சியம்மாள். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மணிராஜ் குடித்துவிட்டு அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். வழக்கம்போல் மணிராஜ் நேற்று முன்தினம் மாலையில் குடித்துவிட்டு மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்த மணிராஜ் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்ைசக்கு பின், மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் மணிராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பசுவந்தனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.