தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கரூர் அருகே உள்ள சோமனூர் முத்தமிழ் புரத்தை சேர்ந்தவர் தொட்டியன் என்கிற அன்பு (வயது 50) கூலி தொழிலாளி. இவரது மனைவி மங்கையர்திலகம் (41). இந்தநிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அன்பு குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி மனமுடைந்து காணப்பட்டார். இந்தநிலையில் நேற்று முன்தினம் சோமூர் சமுதாயக்கூடம் அருகே அன்பு விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டும் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.இந்த தற்கொலை குறித்த புகாரின்பேரில் வாங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.