விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

வேதாரண்யம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-06-20 17:45 GMT

வேதாரண்யம்:

வேதாரண்யம் அருகே நெய்விளக்கு மேலக்காட்டை சேர்ந்தவர் தர்மன். இவருடைய மகன் காளிமுத்து (வயது24). கூலி தொழிலாளி. இவர் குடும்ப வறுமை காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து மயங்கி விழுந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்