விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

தேவதானப்பட்டியில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-07-03 18:45 GMT

தேவதானப்பட்டி,

தேவதானப்பட்டியை சேர்ந்தவர் தங்கப்பாண்டி (வயது 45). கூலித்தொழிலாளி. நேற்று இவர், வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த தேவதானப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் தங்கப்பாண்டி உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தங்கப்பாண்டி தற்கொலை செய்ததற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்