விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

Update: 2023-06-25 20:06 GMT

திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள கோனேரிராஜபுரம் மேல தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 45). விவசாய கூலி தொழிலாளி. இவர் அடிக்கடி வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக சிகிச்சை பெற திருக்காட்டுப்பள்ளி வந்தபோது, பஸ் நிலைய கழிவறை அருகே விஜயகுமார் பூச்சிகொல்லி மருந்தை(விஷம்) குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்ததும் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு உடனடியாக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி போலீஸ் நிலையத்தில் விஜயகுமார் மனைவி திருமயம் (40) புகார் செய்தார். அதன்பேரில் திருக்காட்டுப்பள்ளி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்