விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

கீழ்வேளூர் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை நடந்தது.;

Update: 2022-08-28 17:29 GMT

சிக்கல்:

கீழ்வேளூர் அருகே கோகூர் ஊராட்சி எழிசியம் பகுதியை சேர்ந்தவர் நாகப்பன் மகன் ரகு (வயது 26).கூலி தொழிலாளி. இவருக்கும் திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே அத்திக்கடை புது தெருவை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.திருமணத்திற்கு பிறகு ரகு தனது மனைவி வீட்டிலேயே வசித்து வந்தார். மனைவியிடம் சண்டை போட்டுக்கொண்டு ரகு கோகூருக்கு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த ரகு சம்பவத்தன்று வீட்டில் இருந்த பூச்சி மருந்தை(விஷம்) எடுத்து குடித்து மயங்கி விழுந்தார்.உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரகு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்