விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்

Update: 2022-07-03 19:50 GMT

அய்யம்பேட்டை அருகே உள்ள மாத்தூர் ஒத்தவீடு பகுதியில் வசித்தவர் கார்த்திகேயன் (வயது 33). கூலித்தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர், வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அவர் சம்பவத்தன்று வயலுக்கு தெளிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தை(விஷம்) குடித்துவிட்டு அதே பகுதியில் உள்ள ஒரு வாய்க்காலில் மயங்கிக் கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அய்யம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்த புகாரின் பேரில் அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியநாதன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





Tags:    

மேலும் செய்திகள்