விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
பண்ருட்டியில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
பண்ருட்டி,
பண்ருட்டி விழமங்கலம் பாட்டை தெருவை சேர்ந்தவர் கோவிந்தன் மகன் கார்த்திக்(40). சைக்கிள் நிறுத்தும் இடத்தில் கூலி வேலைபார்த்து வந்த இவர் நேற்று முன்தினம் வீட்டில் வைத்து விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலுார் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி கார்த்திக் பரிதாபமாக இறந்தார். அவரது தற்கொலைக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை? இது குறித்து பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்..