விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

Update: 2023-08-14 19:30 GMT

பெ.நா.பாளையம்

பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த துட்டிபாளையத்தை சேர்ந்தவர் காளி குட்டி(வயது 63). கூலித்தொழிலாளி. இவருக்கு கடந்த 7 ஆண்டுகளாக இடுப்பு மற்றும் முதுகு வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என்று தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த காளிகுட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்